விரைவாக சிரியாவை விட்டு வெளியேறுங்கள். - மத்திய அரசு..!
சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிளர்ச்சிப் படைகள், கடந்த ஒரு வாரமாக, சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தை அகற்றும் நோக்கில், தாக்குதலை நடத்தி வருகின்றன. சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடி வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவில் பயணங்களை தவிர்க்க வேண்டும் என இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை மக்கள் சிரியாவுக்கான பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் முடிந்த வரை விரைவாக சிரியாவை விட்டு வெளியேறுங்கள். +963993385973 என்ற அவசர கால உதவி எண் மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.