1. Home
  2. தமிழ்நாடு

லெபனான் நாட்டை விட்டு வெளியேறிடுங்க... பிரிட்டன் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

1

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து லெபனானில் வசிக்கும் தங்களது குடிமக்கள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேற பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது.

“ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. மோதல் தொடர்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இது விரைவில் இந்த நிலை மோசமடையக்கூடும். அயல்நாட்டு அலுவலக தூதரக குழுக்கலுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.”

“ஆனால் இந்த மோதல் தீவிரமானால், நாங்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற முடியாமல் போகும் இக்கட்டான சூழல் உருவாகலாம். அந்த சமயத்தில் அரசு சார்பில் நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.”

“நிலைமை மோசமானால், மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வலியுறுத்தப்படலாம். இதனால் லெபனானில் உள்ள பிரிட்டன் குடிமக்கள் அங்கிருந்து வெளியேறிவிடுங்கள் என்பதே என் எளிமையான தகவல்,” என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லேமி தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like