1. Home
  2. தமிழ்நாடு

அரசு பேருந்துகளில் 20 இலவச பயணங்கள் போக அறிய வாய்ப்பு... மிஸ் பண்ணிடாதீங்க..!

1

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் முன்பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் முறையான OTRS (Online Ticket Reservation System) செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் 7 அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் மூலம் பயணம் செய்ய முடிகிறது.

பயணிகள் https://www.tnstc.in மற்றும் TNSTC மொபைல் ஆப் வழியாக முன்பதிவு செய்யலாம். தற்போது, பயணிகள் 90 நாட்கள் முன்னர் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஒவ்வொரு நாளும் 20,000 இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

2024 ஜனவரி மாதம் முதல், வார இறுதிகள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தவிர்த்து,பிற நாட்களில் முன்பதிவு செய்யும் பயணிகள் மாதாந்திர "குலுக்கல் முறை" மூலம் பரிசுகள் வென்றுள்ளனர்.

2024 ஜனவரி முதல் மே 2024 வரை ஒவ்வொரு மாதத்திலும் 3 வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது.


2024 ஜூன் மாதம் முதல், வெற்றியாளர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிக்கப்பட்டது, இதில் முதல் 3 வெற்றியாளர்களுக்கு ரூ.10,000, மற்ற 10 வெற்றியாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டன.2024 நவம்பர் மாதம் முதல், வாரம் முழுவதும் முன்பதிவு செய்யும் பயணிகளும் "குலுக்கல் முறை" வழியாக பரிசுகளுக்கு தகுதி பெறும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.


இந்தாண்டு கோடை காலத்திற்காக சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.01/04/2025 முதல் 15/06/2025 வரை முன்பதிவு செய்து பயணிக்கும் 75 பயணிகள் சிறப்பு குலுக்கல் முறையில், தேர்வு செய்யப்பட்டு இலவச பயண சலுகை வாங்கப்படும்.


பரிசுகள்: 1-வது பரிசில் 20 இலவச பயணங்கள் (2025 ஜூலை 1 முதல் 2026 ஜூன் 30 வரை) ,

2-வது பரிசில் - 10 இலவச பயணங்கள் (2025 ஜூலை 1 முதல் 2026 ஜூன் 30 வரை),

3-வது பரிசில் - 5 இலவச பயணங்கள் (2025 ஜூலை 1 முதல் 2026 ஜூன் 30 வரை) வழங்கப்படும்.

Trending News

Latest News

You May Like