ஜெர்மனி நிறுவனம் கண்டுபிடித்த 'டிஜிட்டல் காண்டம்'.. எப்படி வேலை செய்யும்?

சில நேரங்களில் ஸ்மார்ட் போன்களில் உள்ள மைக் மற்றும் கேமராவை ஆன் செய்து பயனர்களின் அந்தரங்கங்கள் விஷயங்களை கூட திருடும் நிலை இருக்கிறது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ஜெர்மனியை சேர்ந்த பில்லி பாய் என்ற ஹெல்த் நிறுவனம் காம்டம் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை டிஜிட்டல் காண்டம் என்றும் சொல்கிறார்கள்.
இது குறித்து காம்டம் செயலியை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் என்ன சொல்கிறது என்றால், இந்த டிஜிட்டல் காண்டம் (காம்டம்) செயலியானது ஸ்மார்ட்போன்ளில் சட்ட விரோத ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங் ஆகாமால் தடுத்து விடுமாம். இதன் மூலம் பயனர்கள், தனிமையில் இருக்கும் போது ரகசியமாக ஹேக்கிங் செய்து யாரும் வீடியோ ரெக்கார்ட் செய்து விடுவார்களோ என அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லையாம்.
புளுடூத் டெக்னாலஜியை பயன்படுத்தி ஸ்மார்ட் போன்களின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களை செயல் இழக்க வைத்து விடுமாம். அது மட்டும் இன்றி ரெக்கார்டிங்க் செய்ய ஏதேனும் முயற்சிகள் நடைபெற்றால் கூடுதல் பாதுகாப்பு லேயர் போல செயல்பட்டு தடுத்து விடுமாம். ஏற்கனவே 30 நாடுகளில் இந்த செயலி பயன்பாட்டில் இருப்பதாகவும், விரைவில் ஆப்பிள் போன்களிலும் கிடைக்கும் எனக் கூறியுள்ளது.
எப்படி செயல்படும்?: இது எப்படி செயல்படும் என்றால், இந்த செயலியை வைத்து இருக்கும் யூசர்கள், தனிமையில் இருக்க செல்லும் போது இந்த செயலியை ஆக்டிவேட் செய்தால் போதும். இந்த செயலி உடனடியாக உங்களின் ஸ்மார்ட் போன் கேமரா மற்றும் மைக்ரோன் செயல்பாடுகளை முடக்கி விடும். யாரும் ஹேக் செய்து ரெக்கார்டிங் செய்ய முடியாது. இதுபோன்ற முயற்சிகள் நடந்தாலும் உடனடியாக செல்போனில் நீண்ட அலாரம் ஒலித்து அலார்ட் செய்துவிடும்.