1. Home
  2. தமிழ்நாடு

வங்கதேசத்தில் ஜனவரி 7-ல் பொதுத்தேர்தல் ..!

1

வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் வங்கதேசத்தின் 12-வது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் காசி ஹபிபுல் வெளியிட்டுள்ளார். 

வங்கதேசத்தில் ஜனவரி 7-ல் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அவர் அறிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 30 . வேட்பு மனுக்கள் பரிசீலனை டிசம்பர் 1 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 17. டிசம்பர் 18-ல் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். தேர்தல் பிரச்சாரம் டிசம்பர் 18-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி  நள்ளிரவு வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like