எல்லை மீறும் காயத்ரி ரகுராம்! காலில் உள்ளதை கழட்டுவோம் என பேச்சு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனுஸ்மிருதி குறித்து பேசிய திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். சென்னையில் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் கவுதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவனின் உருமை பொம்மையை எரித்து சாவு மணி அடித்து சங்கு ஊதிய பாஜகவினர், மனு ஸ்மிருதி குறித்து திருமாவளவன் பேசியது வெட்கக்கேடானது என தெரிவித்தனர்.
அப்போது பேசிய காயத்ரி ரகுராம், நடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுவார்கள் என்று திருமாவளவன் பேசியதாகவும், ஆனால் தாங்கள் ஆடையை கழற்றுபவர்கள் அல்ல, காலில் உள்ளதை கழற்றுபவர்கள் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in