1. Home
  2. தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கலாய்த்த காயத்ரி ரகுராம்! ஆட்டுக்கு பிரியாணி போட்டது மட்டுமல்ல...

1

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்றது.குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதேபோல் நாம் தமிழர் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 

இந்நிலையில் கோவையில் போட்டியிட்டு தோல்வி கண்ட அண்ணாமலையை  நக்கலடித்து அதிமுக மகளிர் அணி துணைச்செயலாளரான காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ஆட்டுக்கு பிரியாணி போட்டது மட்டுமல்ல, ஆட்டுக்கு வேலை செய்த சகுனிகளுக்கும் கூட பிரியாணி போட்டது நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நன்றி தமிழக மக்களே.. என அண்ணாமலை தோல்வி குறித்து பதிவிட்டுள்ளார்.


மேலும் மற்றொரு பதிவில் அதிமுகவுக்கு மக்கள் அளித்துள்ள தோல்வியை மனதார ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "மக்கள் கொடுத்த தீர்ப்பை மனதார ஏற்கிறோம். அநீதிக்கு எதிராக அதிமுக என்றும் குரல் கொடுக்கும். எங்கள் தலைவர்களான பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றும் பொறுப்பை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

நமது தலைவர் அய்யா எடப்பாடியாரின் வழிகாட்டுதலுடன் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம். இப்போது வரை அ.தி.மு.க +20% வாக்குகள் , அதிமுகவின் உண்மையான தொண்டர்களுக்கு நன்றி. நம் தலைவர்களை இதயத்தில் வைத்துள்ள தொண்டர்களுக்கு நன்றி"... என குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like