1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சீண்டிய காயத்ரி ரகுராம்..!

1

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரகுராம் நடிகை மட்டும் இல்லாமல் நடன இயக்குனரும் ஆவார். இவர் சில படங்களில் நடித்தார்.

பின் இவர் அரசியலில் குதித்தார். பல ஆண்டுக்கு முன்னரே காயத்திரி BJP கட்சியில் இணைந்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் BJP யில் இருந்தாலும் வந்தார். பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இவர் தமிழ் நாட்டு மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்தார். இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருந்தார்.

இதனால் இவரை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதோடு மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும், காயத்திரி ரகுராமுக்கும் இடையே சில ஆதரவாளர்களுக்கும், இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கோபம் அடைந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். பின் கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ட்வீட் செய்ய ஆரம்பித்தார். 

இந்நிலையில் இன்று அவர் பதிவிட்ட டீவீட்டில், அண்ணாமலையிடம் பாமக, தேமுதிக, டிஎம்சி, ஓபிஎஸ் மற்றும் டிடிவி சரணடைந்ததாக 420மலை வார்ரூம் தவறான தகவல் உருவாக்குகிறது.

1. பாமகவை சாதியக் கட்சி என்று அழைத்த பிறகு பாஜகவிடம் சரணடைந்ததாக 420மலை வார்ரூம் தகவல் பரப்புகிறது.

2. டிடிவியை ஊழல் குடும்பம், இதுவும் சாதிய கட்சி, சின்னம்மாவை சிறையில் அடைத்த பிறகு பாஜகவிடம் சரணடைந்ததாக 420மலை வார்ரூம் தகவல் பரப்புகிறது.

3. ஓபிஎஸ்க்கு தனது கள பலம் 0 என்று தெரியும் அதனால் புதிய கட்சி தொடங்க முடியவில்லை என்று தான் பாஜகவிடம் சரணடைந்ததாக 420மலை வார்ரூம் தகவல் பரப்புகிறது.

4. கேலி செய்யும் வகையில் என்னை விஜயகாந்த் ஆக்காதீர்கள் என்னை விஜயகாந்த் அழைக்காதே என்று அண்ணாமலை கூறினார், விஜயகாந்துக்கு கள ஆதரவு இல்லை சொன்ன பிறகு பாஜகவிடம் சரணடைந்ததாக 420மலை வார்ரூம் தகவல் பரப்புகிறது.

கூட்டணி அமைக்கும் மற்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் அண்ணாமலையை 2026 ஆம் ஆண்டு முதல்வராக ஏற்றுக்கொள்கிறார்கள் என்றும், தமிழகத்தில் பாஜகவை விரும்புகிறார்கள் என்றும் 420மலை வார்ரூம் தகவல் பரப்பப்படுகிறது.

ஹையோ பாவம். வார்ரூமின் பகல் கனவு. 


 

Trending News

Latest News

You May Like