1. Home
  2. தமிழ்நாடு

”ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்... நிர்மலா சீதாராமனை....” காயத்ரி ரகுராம் அதிரடி..!!

gayathri raguram
ஜெயலலிதா குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய நிலையில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் காயத்ரி ரகுராம்.

ஜெயலலிதா குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய நிலையில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் காயத்ரி ரகுராம்.


இந்தியாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது மணிப்பூர் விவகாரம். அதுகுறித்து நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் முழுக்க விவாதம் நடைபெற்றது. மக்களவையில் தி.மு.க எம்.பி கனிமொழி பேசுகையில், மணிப்பூர் விவகாரத்தை மகாபாரதம் கதையில் வரும் பாஞ்சாலி துகிலுரிகை அத்தியாயத்துடன் ஒப்பிட்டு பேசினார். 

அதற்கு அடுத்தநாள் பதில் கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1989-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலையை உருவிய கட்சி திமுக என்று குறிப்பிட்டு பேசினார். இந்த விவகாரம் பூதாகரமானது. பல்வேறு கட்சியினர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்

இந்நிலையில் நிர்மலா சீதாராமன் கருத்து தொடர்பாக பா.ஜ.க கட்சியின் முன்னாள் உறுப்பினர் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், 

இந்நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் காயத்ரி ரகுராம். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த சம்பவத்திற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்திருப்பார் என கூறியுள்ளார். ஜெயிலலிதா ஒப்பிட்டு பேசுமளவுக்கு பலவீனமான தலைவர் கிடையாது. இதை அவர் கேட்டிருந்தால் பா.ஜ.க கட்சியின் தவறான நிர்வாகத் திறனை எதிர்த்து சாடி இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் மணிப்பூரில் மக்கள் எரிக்கப்பட்டபோதும், பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டபோதும், பாஜக அரசு வாய்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சாதிக் கலவரங்கள் அல்லது மதக் கலவரங்களின் வலையில் தமிழகம் ஒருபோதும் சிக்காது என்று காயத்ரி ரகுராம் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். 

 

Trending News

Latest News

You May Like