1. Home
  2. தமிழ்நாடு

எதிர்பார்த்த கூட்டம் இல்லை - பிரதமரின் ரோட் ஷோ குறித்து விமர்சித்த காயத்ரி ரகுராம்..!

1

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியான பிரதமர் மோடி இன்று கோவையில் வாகனப்பேரணி நடத்தி வருகிறார்.தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்கும் பிரதமர், மறுநாள் காலை விமானம் மூலம் கேரள மாநிலம் புறப்பட்டுச் செல்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து தமிழக காவல் துறை மற்றும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்போடு கோவை சாய்பாபா கோயிலில் இருந்து துவங்கிய ‘ரோடு ஷோ’வில் பங்கேற்று வருகிறார். சாலையின் இருபுறங்களிலும் குவிந்துள்ள பாஜக தொண்டர்கள் வழிநெடுகிலும் பிரதமருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.சுமார் இரண்டரை கி.மீட்டர் தூரம் பிரதமர் மோடி திறந்தவெளி வாகனத்தில் இருந்தபடியே சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் மக்களைச் சந்திக்கிறார். இதையொட்டி, கோவை மற்றும் கோவையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரண்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள காயத்ரி ரகுராம், எதிர்பார்த்த கூட்டம் இல்லை என விமர்சித்துள்ளார். மேலும் ரோட் ஷோ "Tatics Jokes" ...

வேன் நகரும் போது கூட்டம் நகரும். குறைவான கூட்டத்துடன் மோடி அதிர்ச்சியான எதிர்வினை என விமர்சனம் செய்துள்ளார்.   


 

Trending News

Latest News

You May Like