கௌதமிக்கு அதிமுகவில் முக்கிய பதவி..!
அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு, அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை , அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜகவில் இருந்து விலகிய கௌதமி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக கௌதமியை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்