1. Home
  2. தமிழ்நாடு

கேஸ் சிலிண்டர் முன்பதிவு இப்படி செய்தால் ரூ.50 கேஷ் பேக் உறுதி !

கேஸ் சிலிண்டர் முன்பதிவு இப்படி செய்தால் ரூ.50 கேஷ் பேக் உறுதி !


சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்டேன் நிறுவனம் அறிவித்துள்ளபடி வாடிக்கையாளர்கள் பதிவு செய்தால் அவர்களுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இன்டேன், தினமும் பல லட்ச கணக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், கேஸ் சிலிண்டர்கள் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சலுகையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி. அமேசான் பே மூலம் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யதால், ஒரு சிலிண்டருக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும்.

சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கும் அமேசான் பே மூலம் முதல் முறையாக பணம் செலுத்துவதற்கும் ரூ.50 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிப்பை அந்த நிறுவனம் தனது டுவிட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்டேன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள அதன் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like