1. Home
  2. தமிழ்நாடு

எச்சரிக்கும் கருட புராணம் : இறந்தவர்களின் காலணிகளையும் அணியக் கூடாது..ஏன் தெரியுமா ?

1

கருட புராணம் என்பது இந்து மதத்தில் உள்ள ஒரு முக்கியமான நூலாகும். இது இறப்பு, மறுபிறவி மற்றும் ஆத்மாவின் பயணம் பற்றி விளக்குகிறது. இந்த நூல், ஒருவர் இறந்த பிறகு என்ன நடக்கும், ஆத்மா எப்படி அடுத்த பிறவிக்கு தயாராகிறது என்பதைப் பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ளது. கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், நம் வாழ்வில் ஏற்படும் துக்கத்தை குறைக்கவும் முடியும்.

இறந்தவர்களின் பொருட்களை பயன்படுத்துவது பற்றி பல நம்பிக்கைகள் உள்ளன. கருட புராணத்தின்படி, சில பொருட்களை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், அதில் இறந்தவர்களின் சக்தி இருக்கும். அதை பயன்படுத்தினால், ஆத்மா நம்மை நோக்கி ஈர்க்கப்படலாம்.


கருட புராணத்தின்படி, இறந்தவர்களின் உடைகளை உபயோகிக்கக் கூடாது. ஏனென்றால், ஒருவர் அணியும் உடையில் அவருடைய சக்தி இருக்கும். மேலும், அந்த நபருக்கு அவருடைய உடைகளுடன் ஒரு தனி தொடர்பு இருக்கும். எனவே, இறந்தவரின் உடைகளை நாம் பயன்படுத்தாமல் தானம் செய்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் அதை பயன்படுத்தினால், ஆத்மா நம்மை நோக்கி ஈர்க்கப்படலாம். மேலும், அது இந்த உலகத்தின் மீதுள்ள ஆசையை விட முடியாமல் தவிக்கும். நீங்கள் அந்த உடைகளை பயன்படுத்த விரும்பினால், அல்லது தானம் செய்ய விரும்பினால், அவற்றை நன்றாக துவைத்த பிறகு உபயோகிக்கலாம்.


மேலும் கருட புராணத்தின்படி, இறந்தவர்களின் நகைகளை அணியக் கூடாது. இறந்தவர் இறப்பதற்கு முன் நகைகளை பிரித்து கொடுத்திருந்தால், நீங்கள் அவற்றை அணியலாம். ஆனால், இறந்த பிறகு உடலில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை அணியக் கூடாது. அதே போல் இறந்தவர்களின் கடிகாரத்தை பயன்படுத்தக் கூடாது என கருட புராணம் எச்சரிக்கிறது. ஏனெனில் கடிகாரத்தில் இறந்தவர்களின் ஸ்பரிசம், உயிர்ப்பு சக்தி இருக்கும்.


இறந்தவர்களின் காலணிகளையும் அணியக் கூடாது. ஏனென்றால், அதில் இறந்தவரின் கால்களின் தூசி இருக்கும். அப்படி செய்தால் பித்ரு தோஷம் ஏற்படலாம். இருப்பினும், இது மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் மாறுபடும். இறந்தவரின் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால், அவரை மறக்க முடியாமல் கஷ்டமாக இருக்கும். அதனால் தான் இப்படி சொல்கிறார்கள்.

Trending News

Latest News

You May Like