வெளியான ‘கங்குவா’ பட டிரெய்லர்!
சூர்யா மற்றும் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கங்குவா படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறது. மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவான பான் இந்திய படம் என்பதால் இப்படத்தின் ப்ரோமோஷனை படக்குழு பார்த்து பார்த்து செய்து வருகின்றது. இந்தியா முழுவதும் கங்குவா படத்தின் ப்ரோமோஷனை செய்து வருகின்றனர். இதற்காக இரண்டு வாரங்கள் தன் கால்ஷீட்டை ஒதுக்கியிருக்கின்றார் சூர்யா. இரண்டு வருடங்கள் கழித்து சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் கங்குவா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய பொருட்ச்செலவில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகும் திரைப்படம் தான் கங்குவா.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் 7 மணிக்கு ரிலீஸ் என்று அறிவிக்க திடீரென 9 மணிக்கு தள்ளி போனது. ஒரு வழியாக படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.