1. Home
  2. தமிழ்நாடு

பெண்ணின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் !

பெண்ணின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் !


உத்தரபிரதேசத்தில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அண்மையில் ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது.

இந்நிலையில் அங்கு நடந்த மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் 40 வயதான ஐடி நிறுவன ஊழியருக்கு நடந்துள்ளது. நொய்டாவில் வசித்து வரும் அப்பெண், தனது புகைப்படங்களை வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் ஒரு தொலைபேசி எண்ணுடன் குறிப்பிட்டு தவறான நோக்கத்தில் ஒரு கும்பல் பரப்பி வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

பெண்ணின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் !

அதில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய புகைப்படங்களை எடுத்து அதனை மார்ஃபிங் செய்த கும்பல் இணையத்தில் பதிவிட்டுள்ளதாகவும், அதன் மூலம் அந்த கும்பல் பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இதற்கு பலரிடம் முன்பணம் வசூலித்தும் மோசடி செய்துள்ளனர் என கூறியுள்ளார்.

அப்பெண்ணின் நண்பர்கள் சிலர் பாலியல் தொழில் பெண் என குறிப்பிட்டு தொலைப்பேசி எண்ணுடன் புகைப்படம் சமூக வலைதளங்கள் மற்றும் பாலியல் தொழில் வழங்கும் கணக்குகளில் படங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அதில் வேறொருவரின் பெயர் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

பெண்ணின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் !

மேலும் அதில் குறிப்பிட்டுள்ள தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டப்போது வேறொரு நபர் பேசுகிறார். அவர் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ய வங்கிக் கணக்கில் பணம் அனுப்புமாறு கூறுவதாக அப்பெண் தெரிவித்தள்ளார்.

இந்த புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். 2 குழந்தைகளுக்கு தாயான அப்பெண் இச்சம்பவத்தால் பெரும் மனஉளைச்சல் அடைந்துள்ளார். எனவே அக்கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like