ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி கோவை ரத்தினபுரி சாலையில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் பத்து, இருபது, நூறு, ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் விநாயகரைச் சுற்றி அலங்காரம் செய்யப்பட்டன. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
200 கிலோ பேரிச்சம் பழங்களை கொண்டு விநாயகர் சிலை வடிவமைப்பு!

நந்தனம் சிஐடி நகரில், அப்பகுதி இளைஞர்களின் சார்பில் 200 கிலோ பேரிச்சம்பழம், முந்திரி, ஏலக்காய் மற்றும் ரூபாய் நாணயங்களைக் கொண்டு விநாயகர்ச் சிலை வடிவமைக்கப்பட்டது.
தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர்ச் சிலையை அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இது தொடர்பாகக் கூறிய அப்பகுதி இளைஞர்கள் எங்கள் ஒற்றுமையே இந்த விநாயகர்ச் சிலைக்கு சாட்சி எனப் பெருமிதத்துடன் கூறினர்.
பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கொளத்தூர்ப் பூம்புகார் நகரில் விநாயகர்ச் சிலை பிரதிஷ்டைச் செய்யப்பட்டது.
2 ஆயிரத்து 300 பித்தளைத் தட்டுகள், ஆயிரத்து 500 குங்கும சிமிழ்கள் மூலம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட 42 அடி விநாயகர்ச் சிலை வைக்கப்பட்டுப் பூஜை செய்யப்பட்டது.
இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுச் சாமி தரிசனம் செய்தனர்.
.png)
