1. Home
  2. தமிழ்நாடு

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு காந்தியடிகள் விருது!

Q

கள்ளச் சாராயத்தை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றி வரும் போலீசாருக்கு ஆண்டுதோறும் காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான பதக்கம் 5 போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட மத்திய நுண்ணிறவு பிரிவில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் சின்னகாமணன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வரும் ஏட்டு மகாமார்க்ஸ், திருச்சி துறையூர் மது விலக்குப் பிரிவு ஏட்டு கார்த்திக், சேலம் ஆயுதப்படை இரண்டாம் காவலர்கள் சிவா, பூமாலை ஆகிய 5 பேருக்கும் காந்தியடிகள் விருதுடன், ரூ.40 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பதக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

Trending News

Latest News

You May Like