ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் தேதி அறிவிப்பு!

இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வரும் அக்டோபர் 21- ஆம் தேதி அன்று காலை 07.00 மணி முதல் காலை 09.00 மணி வரை நடைபெறும்; மனிதர்களை விண்கலத்தில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 400 கி.மீ.க்கு கொண்டு சென்று பின்னர் பாதுகாப்பாக, பூமிக்கு கொண்டு வருவதே ககன்யான் திட்டமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ககன்யான் திட்டத்தின் விண்கலம் தொடர்பான புகைப்படங்களையும் இஸ்ரோ பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.