1. Home
  2. தமிழ்நாடு

பிக் பாஸ் வீட்டில் ஏங்கும் கேப்ரில்லா..!

பிக் பாஸ் வீட்டில் ஏங்கும் கேப்ரில்லா..!


விஜய் தொலைக்காட்சியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆர்வத்தை பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதற்காகவே தினமும் புதுப்புது டாஸ்க் அறிமுகப்படுத்தி வருகின்றது பிக் பாஸ்.

இப்படி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று திடீரென்று பாலாஜி முருகதாஸ் சனம் செட்டி இடம் ரொமான்ஸ் செய்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதாவது நேற்று பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் மியூசிக்கல் சேர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் தோற்று வெளியேறும் போட்டியாளர்கள் வேறு ஒருவரைக் கூப்பிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்ய சொல்ல வேண்டும் என்றும் அந்த டாஸ்க்கில் குறிப்பிட்டிருந்தது.இந்த நிலையில் இந்த டாஸ்க் இலிருந்து முதலில் வெளியேற்றப்பட்ட சனம் பாலாஜிக்கு தன்னைப்பற்றி 10 பிடித்த விஷயங்களை கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனால் பாலாஜி சனம் செட்டி உடைய கையைப் பிடித்து விட்டு ப்ரோபோசல் செய்வதுபோல் சனத்தின் அழகை வர்ணிக்க தொடங்கினார். இருந்தாலும் இறுதியில் எதுவும் சொல்லாமல் டிமிக்கி கொடுத்து தப்பித்தார் பாலாஜி. மேலும் பாலாஜி சனம் ஷெட்டியை இவ்வாறு வர்ணித்ததை பார்த்துக்கொண்டிருந்த கேப்ரில்லா வின் முகம் பியூஸ் போன பல்பு போல் சுருங்கி விட்டது.

ஏனெனில் கேப்ரில்லா வின் முகத்தில் பாலாஜி நம்மளையும் இப்படியும் வர்ணிக்க மாட்டாரா என்ற ஏக்கம் தலைவிரித்தாடியது என்று பார்ப்பவர்களுக்கு தெளிவாக தெரிந்தது.

அதுமட்டுமின்றி இந்த எபிசோடை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் பாலாஜி ரொமான்ஸை பார்த்துவிட்டு அட இவரு கவின மிஞ்சி விடுவார் போல என்று கிண்டலடித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like