வருங்கால துணை முதல்வரே சொன்ன நிர்வாகி ... பதறிய நயினார் நாகேந்திரன்!
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில், அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். அப்போது, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை தமிழகத்திந் துணை முதல்வரை வருக வருக என்று அழைத்தார். இதை சற்றும் எதிர்பாராத நயினார் நாகேந்திரன் ஒரு நிமிடம் பதறிப் போனார்.
உடனே, அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரிடம் இதுபோன்று பேசக்கூடாது என்று நயினார் நாகேந்திரன் கைகளால் சைகை காண்பித்து அறிவுறுத்தினார். உடனே, பாஜக மாவட்டத் தலைவர் பரமேஸ்வரி தனது பேச்சை மாற்றி எங்களது பாசமிகு அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களே வருக வருக என்று கூறினார்.
ஏற்கனவே, அதிமுக - பாஜக கூட்டணியில் கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் அந்த மாவட்டத்தின் தலைவர் பரமேஸ்வரி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை தமிழகத்தின் துணை முதல்வர் என்று கூறியது இரு கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
.png)