மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடலுக்கு இறுதிச் சடங்கு தொடக்கம்!

மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடலுக்கு இறுதிச் சடங்கு தொடக்கம்!

மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடலுக்கு இறுதிச் சடங்கு தொடக்கம்!
X

மறைந்த பாடகர் எஸ்பிபி உடலுக்கு இறுதி சடங்குகள் தாமரைக்குளத்தில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெறுகின்றன.இன்னும் சற்று நேரத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. காலை 10:15 மணியளவில் இறுதிச்சடங்கு துவங்கியது.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி, சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பாட்டார். 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று மதியம் 1.04 மணிக்கு அவர் உயிரிழந்ததாக அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.இதனால் திரைத்துறையினர் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மறைந்த எஸ்பிபியின் இறுதிப் பயணம் தமிழ்நாடு அரசு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it