1. Home
  2. தமிழ்நாடு

நாமக்கல்லில் இரவு வான் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு..!

1

கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் புதிதாக இரவு வான் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கடந்தம ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது வனத்துறை அமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில் இரவு வான் பூங்கா அமைக்க முதல் கட்டமாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையின் வனப்பபை இயற்கை கலாச்சார மற்றும் வரலாற்று வளமாக அங்கீகரிக்கும் வகையில் ரூ.1 கோடி செலவில் 'இரவு வான் பூங்கா' (Dark Sky Park) அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசு முதற்கட்டமாக 44 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தனித்துவமான புவியியல் மற்றும் காலநிலை அம்சங்களைக் கொண்டுள்ள கொல்லிமலையில் இரவு வான் பூங்கா நிறுவுவதன் மூலம் ஒளி மாசுபாடு குறைவதோடு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பாதுகாப்பையும் ஒட்டுமொத்த பல்லுயிரியலையும் உறுதி செய்யும் என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவு வான் பூங்கா உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள், வானியல் புகைப்படக் கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு வான் பூங்கா விலங்குகளுக்கு இணக்கமான ஒரு பூங்காவாக இருக்கும் என்றும் மின்சார விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்து இரவு வானத்தில் நட்சத்திரங்களைப் பார்ப்பதை இது அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like