1. Home
  2. தமிழ்நாடு

வெளியான முழு லிஸ்ட் : தமிழகத்தில் பத்ம விருதை பெற்ற 13 பேர்..!

1

நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கினார்.

  

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் அஷ்வினுக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விருதை குடியரசு தலைவரிடமிருந்து பெற்றார். 

  

சமையல் கலைஞர் செஃப்.தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு அந்த விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். 

  

தினமலர் வெளியீட்டாளர் லக்‌ஷ்மிபதி ராம சுப்பையருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து வாங்கினார். 

  

தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, பண்பாடு, கல்வி சார்ந்து பல நிதி உதவிகளை இவர் செய்திருக்கிறார். இந்த நிலையில், பத்ம பூஷன் விருதை பெற்றார். 

  

நடிகையும் நடனக்கலைஞருமான ஷோபனாவிற்கு, கலைத்துறையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 28 அந்த விருதை பெற்றார். இவர் சென்னையில் நடனப்பள்ளி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தாள வாத்திய கலைஞர் குருவாயூர் துரை, எ.டி.ஸ்ரீனிவாஸ், தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஹட்சன் தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன், ஆலைய கட்டட கலைஞர் ராதாகிருஷ்ணன் தேவசானாபதி, சீனி விஸ்வநாதன், பறை இசை கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ விருதை பெற்றனர். 

Trending News

Latest News

You May Like