1. Home
  2. தமிழ்நாடு

சைவம் முதல் அசைவம் வரை : அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு இபிஎஸ் விருந்து..!

1

அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்துள்ளதை வெளிப்படுத்தும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து வைக்கிறார். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வரும் 23ஆம் தேதி இரவு விருந்து உபசரிப்பு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருந்தின் போது சிக்கன், மட்டன், இறால், முட்டை என எம்.எல்.ஏ.க்களுக்கு விதவிதமான அசைவ விருந்து படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சைவம் விரும்பும் எம்.எல்.ஏ.க்களுக்கும் சைவ உணவுகள் தயார் செய்யப்பட உள்ளன. இதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத் தேர்தலுக்காக எம்.எல்.ஏ.க்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் எனவும், வியூகங்களை சிறப்பாக வகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட அன்றே உள் துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்களுக்கு தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி விருந்து வைத்து அசத்தினார். வரும் மே 2ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, செயற்குழு உறுப்பினர்களுக்கும் தடபுடலாக மதிய உணவு பரிமாறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like