UPI மாற்றம் முதல் ஏடிஎம் கட்டணம் வரை..! ஜூலை 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்..!

ஜூலை 1 முதல், ரயில்வே டிக்கெட் முன்பதிவு மற்றும் கட்டணங்கள் தொடர்பாகவும் மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது ஏசி மற்றும் ஏசி அல்லாத டிக்கெட்டுகளின் விலை ஓரளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி அல்லாத வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 1 பைசாவும், ஏசி வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இப்போது ரயிலில் காத்திருப்பு டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மொத்த இருக்கைகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக காத்திருப்பு டிக்கெட்டுகள் வழங்கப்படாது. அதாவது, ஒரு பெட்டியில் 100 இருக்கைகள் இருந்தால், 25 காத்திருப்பு டிக்கெட்டுகள் மட்டுமே கிடைக்கும். இருப்பினும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு இதில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இனி புதிய பான் கார்டைப் பெற விரும்பினால், ஜூலை 1, 2025 முதல், உங்களிடம் ஆதார் கார்டு இருக்க வேண்டும். ஆதார் இல்லாமல் புதிய பான் கார்டு உருவாக்கப்படாது. மேலும், ஒருவரின் பான் கார்டு இன்னும் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், அது டிசம்பர் 31, 2025 க்குள் இணைக்கப்பட வேண்டும். வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக சிலர் போலி பெயர்களில் பான் கார்டுகளை உருவாக்கி வருவதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது. இதுபோன்ற செயல்களைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல், IRCTC கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்டுகள் கிடைக்கும். இது தவிர, ஜூலை 15 முதல், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிடுவது அவசியம். OTP நிரப்பப்படாவிட்டால் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படாது. அதே நேரத்தில், தட்கல் முன்பதிவு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ரயில்வே முகவர்கள் இனி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.
நீங்கள் ICICI வங்கி ATM-ல் இருந்து பணம் எடுத்தால், இப்போது கவனமாக இருங்கள். ஜூலை 1 முதல், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் எடுத்தால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 செலுத்த வேண்டும். இருப்பினும், பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் 5 முறை வரை மற்றும் பெருநகரங்களில் 3 முறை வரை பணம் எடுப்பது இலவசம். இதன் பிறகு, ஒவ்வொரு பணம் முறை பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
HDFC கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஜூலை முதல் புதிய கட்டணங்கள் செயல்படுத்தப்படுகின்றன. Paytm அல்லது PhonePe போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், இப்போது அதற்கு 1 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர, மின்சாரம் அல்லது தண்ணீர் பில் போன்ற பயன்பாட்டு பில்களை HDFC கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால், அதற்கும் தனி கட்டணம் விதிக்கப்படும்.
ஜூன் மாதமே EPFO அதன் புதிய பதிப்பான EPFO 3.0 -ஐ தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜூன் மாதம் இது நடக்காவிட்டால், கண்டிப்பாக ஜூலை மாதம் இது அமலுக்கு வரும். இதன் மூலம், பணம் எடுப்பது, கணக்கு விவரங்களைக் கோருவது, க்ளெய்ம்கள் அல்லது புதுப்பித்தல் போன்ற PF தொடர்பான சேவைகள் முன்பை விட மிக எளிதாகிவிடும். இது அமலுக்கு வந்த பிறகு இபிஎஃப் உறுப்பினர்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது போல EPF ATM அட்டையைப் பயன்படுத்தி PF கணக்கிலிருந்து நேரடியாக ATM -இலிருந்து பணத்தை எடுக்க முடியும்.
ஜூலை மாதத்தில் 8வது ஊதியக்குழு உறுப்பினர்களின் நியமனம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பிறகு ஃபிட்மெண்ட் ஃபாக்டர், ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு மற்றும் இன்னும் பல முக்கிய அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகளை குழு தயார் செய்யும்.