1. Home
  2. தமிழ்நாடு

மறுபடியும் முதல்ல இருந்தா? யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்..!

1

சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4ஆம் தேதி தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர். அவரது கார் மற்றும் விடுதி அறையை சோதனை செய்த போது கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பழனிசெட்டிபட்டி போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு வழக்கிலும்
ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் ஜாமீன் வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது.அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து அவருக்கு சில வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் அனைத்து வழக்குகளிலும் சவுக்கு சங்கர் ஜாமீன் பெற்றுவிட்டால் விடுதலையாவார் என்று நிலையில் நேற்று அவர் மீது மீண்டும் ஒரு குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் ஆகஸ்ட் 12 வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி பொதுமக்களை போராடிய தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செயப்பட்டிருந்தது.இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) தீர்ப்பளித்த நீதிபதிகள், “சவுக்கு சங்கர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த காரணங்களை உத்தரவில் தெரிவிக்கவில்லை. சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானவையாக தெரியவில்லை. எனவே அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்பதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும்” என கூறினர்

Trending News

Latest News

You May Like