1. Home
  2. தமிழ்நாடு

பயமுறுத்தும் கணிப்புகள் : இந்தாண்டு வரும் பேராபத்துகள்.. அடுத்தடுத்து நடக்கப்போவது இதுதான்..!

1

பாபா வங்கா என்பவர் உலகில் நடக்கவிருக்கும் பல விஷயங்களை முன்பே கணித்து இருக்கிறார். அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் முதல் இங்கிலாந்து இளவரசி டயானா மரணம், கொரானா உள்ளிட்ட உலகின் முக்கிய நிகழ்வுகளை முன்பே கணித்து உள்ளார். இவர் கூறிய பல விஷயங்கள் இன்று வரை நடந்து வருகின்றன. அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் நிகழ இருக்கும் விஷங்களை கணித்துள்ள நிலையில், அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம். 


பாபா வங்காவின் எதிர்காலக் கணிப்புகள் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனென்றால் பேரழிவானது, 2025ல் இருந்து தொடங்கும் என அவர்  கணித்து இருக்கிறார். அவற்றின் ஒன்றாக தற்போது மியான்மர் மற்றும் தாய்லாந்து நிகழ்ந்து இருக்கிறது. இது பேரழிவை ஏற்படுத்தி உள்ள நிலையில், தொடர்ந்து நிலநடுக்க எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு இறுதி வரை இயற்கை பேரழிவுகள் இருக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். மேலும், இந்த ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு மோதல் ஏற்படும் என்றும் அதில் மக்கள் பலர் உயிரிழப்பார்கள் என்றும் அவர் கணித்துள்ளார். இந்த மோதல் ஐரோப்பிய கண்டத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில், மோதல் காரணமாக மக்கள் தொகை கணிசமாகக் குறையும். அதன் பிறகு, 2028ல் புதிய வளங்களைத் தேடி மனிதர்கள் வீனஸை(Venus) அடைவார்கள் என்று பாபா வங்கா கணித்துள்ளார். பின்னர் 2033-ல் மிகப்பெரிய பனிக்கட்டிகள் உருகும் என்றும், இதனால் கடல் மட்டம் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளார். இதனால் பெரிய அலைகள் தாக்கி பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 2043ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் இஸ்லாமிய பெரும்பான்மை ஏற்படும், 2066ஆம் ஆண்டில் சுற்றுச்சூழலை மறுகட்டமைக்கும் ஆயுதத்தை அமெரிக்க உருவாக்கும். 2076ல் சமூகத்தின் சாதி கட்டமைப்பு ஒழியும் என கணிக்கப்பட்டுள்ளது.  2130ல் வேற்றுகிரகவாசிகளுடனான மனித தொடர்பையும் பாபா வங்கா கணிக்கிறார். மேலும், 2170ல் பருவநிலை மாற்றம் பூமியில் அழிவை ஏற்படுத்தும். பூமியில் வறட்சி அதிகரித்து மனித வாழ்க்கையை மோசமாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 3005ஆம் ஆண்டு பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே போர் ஏற்படும் என்றும் கணித்துள்ளார். 3797ல் பூமியிலிருந்து உயிர்கள் பிரியும் என்றும், இறுதியாக 5079ல் உலகம் அழிந்து மனித இனம் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like