1. Home
  2. தமிழ்நாடு

#FriendshipDay : இன்று கொண்டாடும் நண்பர்கள் தினம் ஆகஸ்ட் மாதம் மாறியது எப்படி தெரியுமா ?

1

காதலர்கள் தினத்திற்கு முந்தைய நாளாக கொண்டாடப்பட்ட நண்பர்கள் தினம் அதன்பின் ஆகஸ்ட் மாதம் முதல் வார ஞாயிற்றுகிழமைக்கு மாறியது எப்படி என்பதை பார்க்கலாம்.

‘முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு’ என்ற வள்ளுவனின் வாக்கோடு முடிவதில்லை நட்பு. சூரியன்- சந்திரன், இரவு- பகல், ஆண்- பெண், இன்பம் - துன்பம், காலை- மாலை, மழை- வெயில் என ரைமிங்காக வரும் அனைத்திற்குமே ஒரு துணை தேவைப்படுகிறது. அப்படி ஓவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் பிரிக்க முடியாத துணை தேவைப்படுகிறது இதுதான் நட்பு... 

வெளிநாட்டு கலாச்சாரத்தில் மலர்ந்ததா நண்பர்கள் தினம்!

நட்பு மலரும் இடம் பள்ளியாகவோ, கல்லூரியாகவோ, அலுவலகத்திலோ, பேருந்து பயணத்திலோ, ரயில் பயணத்திலோ கூட இருக்கும். ஆனால் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதுதான் உறவின் மேன்மையாக கருதப்படுகிறது. காலங்கள் கடந்து சென்றாலும் என்றைக்கோ, எங்கோ இரு இடத்தில் நம் நண்பனின் குரல் ஒலித்தது காதில் கேட்கும் இதுவே உருகவைக்கும் நட்பு. அந்த இடத்திற்கு மீண்டும் சென்றாலும் இல்லை நண்பன் சொன்ன அதே வார்த்தை பிறர் பயன்படுத்தும்போதும் நண்பனை எண்ணி கண்ணீர் மட்டுமே வரும். வாழ்க்கையில் பல இடங்களில் சிரிக்க வைத்ததும் நட்புதான், சிந்திக்க வைத்ததும் நட்புதான். மனிதனுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் நண்பர்கள் இருக்கும் 

அன்னையர் தினம், தந்தையர் தினம், சகோதரர் தினம், காதலர் தினம், முத்த தினம், எமோஜி தினம் என இப்படி பல தினங்கள் ஏதோ ஒரு சம்பவத்தின் காரணமாகவோ அல்லது வரலாற்றை விளக்கும் விதமாகவோதான் கொண்டாடப்படுகிறது. அந்த லிஸ்டில்தான் நண்பர்கள் தினமும் உள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவரும் கொண்டாட வேண்டிய தினம்தான் இந்த நண்பர்கள் தினம். 

வெளிநாட்டு கலாச்சாரத்தில் மலர்ந்ததா நண்பர்கள் தினம்!

பெற்றோரிடம், கணவர், மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத சில விஷயங்களை நண்பர்களிடம், தோழிகளிடம் பகிந்து கொள்ளலாம். எவ்வித  எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலம் இன்றி உண்மையான பாசத்தை அள்ளித் தருவதில் நட்புக்கு வேறு உறவுகள் நிகரில்லை.

முதன்முதலில் 1935ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் ந‌ட்பு தினம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று முதல் அமெரிக்காவில் மலர்ந்தது நண்பர்கள் தினம். இதையடுத்து பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளிலும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நண்பர்கள் தினத்திலே பல வகையுண்டு. தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும், மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும், சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும், பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. காதல் வேண்டுமானாலும் தோற்கலாம் ஆனால், நட்பு தோற்றதாக சரித்திரத்திலேயே இல்லை.

Trending News

Latest News

You May Like