‘ஃப்ரெண்ட்ஸ்’ பட நடிகர் காலமானார்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

1994 முதல் 2004 வரை ஒளிபரப்பான அமெரிக்க டிவி தொடர் ‘ஃப்ரெண்ட்ஸ்’. இத்தொடருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. மொத்தம் 10 சீசன்கள், 236 எபிசோட்களைக் கொண்ட இந்த தொடரில் இடம்பெற்ற அத்தனை கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். இதில் சாண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மேத்யூ பெர்ரி.
தற்போது 54 வயதாகும் மேத்யூ, கலிபோர்னியாவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில், பாத் டப்பில் இறந்து கிடந்துள்ளார். தண்ணீரில் மூழ்கியதால் மேத்யூ பெர்ரி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு அருகில் போதைப் பொருட்கள் இருந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் கூறுகின்றனர்.
1997ஆம் ஆண்டு முதல் 2001 மேத்யூ கடுமையான போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஃப்ரெண்ட்ஸ்’ தொடரின் 3வது சீசன் படப்பிடிப்பு நடந்த ஞாபகமே தனக்கு இல்லை என்றும், அந்த அளவுக்கு தான் போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும் மேத்யூ கூறியிருந்தார். மேத்யூ பெர்ரியின் மறைவு, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்; பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
RIP Matthew Perry, 54.
— Piers Morgan (@piersmorgan) October 29, 2023
The Friends star was a great actor, but by his own admission, a very tormented guy. His recent autobiography about his addiction-ravaged life was one of the most powerful, honest and revealing I’ve ever read. Such sad news. pic.twitter.com/RxAA1V1fr6