1. Home
  2. தமிழ்நாடு

வெறித்தனமான ட்ரைலர்... இணையத்தில் பட்டைய கிளப்பும் ராயன் படத்தின் ட்ரைலர்..!

1

தனுஷின் 50வது படத்திற்கு ‘ராயன்’என பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை தனுஷ் இயக்கி அவரே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் தனுஷூடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், உஷாரா விஜயன், அபர்ணா முரளி வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தி தற்போது முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு, தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது. மேலும் ராயன் படத்தின் டிரைலர் வருகிற ஜூலை 16 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனுடன் திரைப்படம் வரும் 26ம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

ராயா காட்டில் ஆபத்தான மிருகம் எது என செல்வராகவன் தனுஷை பார்த்து கேட்பது போல டிரெய்லர் ஆரம்பிக்கிறது. அதற்கு சிங்கம் தான் என ராயன் சொல்ல, அது இல்லை. சிங்கம் வலிமையான மிருகம். ஆனால், ஆபத்தான மிருகம் ஓநாய் தான். அது ஸ்கெட்ச் போட்டு சிங்கத்தையே சாகடிச்சிடும் என்கிறார். ராயனுக்கு கொடுக்கும் பில்டப்புகளை பார்த்து விட்டு எஸ்.ஜே. சூர்யா அவன் ஆம்பளையா இருந்தா இங்க வந்து போட சொல்லு என எஸ்.ஜே. சூர்யா சொல்ல, பேய் மாறி வருவான் என வசனம் வரும் இடங்களில் எல்லாம் டிரெய்லர் தெறி மாஸாக உள்ளது.

டிரெய்லர் இறுதியில் போலீஸ் ஸ்டேஷனில் என்ன சொன்ன வாபஸ் வாங்கிட்டானுங்க என கேட்டதும், பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் சொல்வது போல "உண்மையை சொன்னேன்" என தனுஷ் சொல்லிவிடுவாரோ என நினைத்த ரசிகர்களுக்கு, "கெஞ்சிக் கேட்டேன்" என அவர் சொல்லும் இடம் ராயன் நிச்சயம் வெல்வான் என்கிற நம்பிக்கையை கொடுக்கிறது.

Trending News

Latest News

You May Like