பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ஒரு வாரத்தில் வழங்கப்படும் : முதல்வர் ரங்கசாமி..!

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் புதுச்சேரியில் எப்போது அமல்படுத்தப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதனால் இன்னும் ஒரு வாரத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.