1. Home
  2. தமிழ்நாடு

இலவச இணைய மருத்துவம் 'e-sanjeevani’! பயன் அடைவது எப்படி?

இலவச இணைய மருத்துவம் 'e-sanjeevani’! பயன் அடைவது எப்படி?


மருத்துவமனைகளுக்கு சென்றால் கொரொனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் , வீட்டிலிருந்தபடியே, தங்கள் உடல் நலம் குறித்த சந்தேகங்களை உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களிடமிருந்து ஆலோசனைகளாக பெறும் வகையில், இணையத்தில் இ சஞ்ஜீவினியை நம் மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து அறிமுகம் செய்துள்ளனர். 

கொரோனா அறிகுறி நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் பிற நோயாளிகளுக்கும் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இ சஞ்ஜீவினி. இந்திய அளவில் முதற்கட்டமாக 15 மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ள இச்சேவை தமிழகத்தை பொறுத்தவரை விடுமுறையின்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை செயல்படுகிறது. நோயாளியாக பதிவு செய்து ஆலோசனை பெற patient registration பிரிவில் நுழைந்து உங்கள் அலைபேசி எண்ணை உள்ளீடு செய்யுங்கள். பின்னர் உங்கள் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யுங்கள்.

அதை தொடர்ந்து நோயாளியாக பதிவு செய்து ,டோக்கன் பெறுவதற்கான பக்கம். திறந்தவுடன் உங்கள் பெயர், பாலினம், மின்னஞ்சல் முகவரி, வயது, மாநிலம், மாவட்டம், பெருநகரம், வீட்டு விலாசம் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். நீங்கள் தினசரி மருந்து எடுத்துக்கொள்பவர் அல்லது நாள்பட்ட நோயாளி என்றால் உங்களது முந்தைய பரிசோதனை தரவுச்சீட்டுகளை, புகைப்படங்களாகவோ அல்லது கோப்புகலாகவோ மாற்றி குறிப்பிடப்பட்டுள்ள அளவிற்க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். டோக்கன் பெருவதற்க்கான பக்கத்தை முழுமையகாக பூர்த்தி செய்து முடித்தபின், குறுஞ்செய்தியாக வந்த கடவுச்சொல்லை மீண்டும் உள்ளீடு செய்யுங்கள். விவரங்கள் தரவு செய்யப்பட்டு உங்களுக்கான நோயாளி எண் மற்றும் டோக்கன் எண்ணானது நீங்கள் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணிற்க்கு மற்றொரு குறுஞ்செய்தி யாக அனுப்பப்படும். அந்த இரு எண்களையும் பதிவு செய்தால் நீங்கள் காத்திருப்போர் பக்கத்திற்க்குள் நுழைந்து விடுவீர்கள்.


மருத்துவருக்கு அழைப்பு விடுப்பதற்கான நேரம் தொடங்கியவுடன் ,அழைப்பை உறுதி செய்யுங்கள். பின்னர் சிறிது நேரத்தில் காணொலி வாயிலாக மருத்துவர் உங்களுடன் இணைவார். மருத்துவ ஆலோசனைகள் பெற்றவுடன் e-priscription பக்கத்திற்கு சென்று மருந்துச்சீட்டினை பதிவிறக்கம் செய்து மருத்துகளை உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மருந்துக்கடைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

newstm.in

Trending News

Latest News

You May Like