1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் முதல் கோமாரி நோய்க்கான இலவச தடுப்பூசி முகாம்..!

Q

கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

கால்நடை வளா்ப்பில் கால் மற்றும் வாய் நோய் அல்லது காணை என்று அழைக்கப்படும் கோமாரி நோய் வைரஸ் நச்சுயிரியால் ஏற்படுகிறது. பொதுவாக, கலப்பின மாடுகளை, கால் மற்றும் வாய் கோமாரி நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும்.

இந்த நோயால், கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும், சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத் திறன் குறையும். இளங்கன்றுகளின் இறப்பு சதவீதம் உயரும்.

இதனால், கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 6 மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு 2 முறை என அனைத்து கால்நடைகளுக்கும் (பசு மற்றும் எருமையினம்) இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

16.12.2024 முதல் தொடர்ந்து 21 நாட்கள் கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் முழுவதும் இலவசமாக நடைபெறும்.

எனவே, அனைத்து கால்நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்போது 3 மாத வயதிற்கு மேலுள்ள கன்றுக்குட்டிகளுக்கும் மற்றும் கறவை மாடுகள், எருதுகள், காளைகள், எருமையினங்கள் உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like