1. Home
  2. தமிழ்நாடு

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் : ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்..!

1

18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நேற்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார் 

இந்நிலையில் ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் ஒர் பார்வை...

  • * 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம்.
  • * மின்சாரத்தை விற்பனை செய்து வருவாய் பெருக்க, சூரிய ஒளி மின்சக்தி திட்டம்.
  • * சோலார் பேனல் திட்டம், மின்சார கட்டணத்தை குறைக்கும்.
  • * உலகத்திலேயே மிகப்பெரிய உள்நாட்டு விமான சேவை கொண்ட நாடு இந்தியா.
  • * மும்பையை அடுத்து மற்ற பகுதிகளிலும் புல்லட் ரயில் திட்டம் கொண்டுவர முயற்சி.
  • * உத்தரபிரதேசம், தமிழகத்தில் ராணுவ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
  • * பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி முன்பை காட்டிலும் 18 மடங்கு அதிகரித்துள்ளது.
  • * 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த தயார். இதற்கான முயற்சி எடுக்கப்படும்.
  • * வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட பல நடவடிக்கைகள்.
  • * மத்திய பட்ஜெட் இந்தியாவை புதிய பாதையில் அழைத்துச் செல்லும்.
  • * 5வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது.
  • * உற்பத்தி, சேவைகள், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம்.
  • * ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படுகிறது.
  • * ரூ.3,20,000 கோடி மதிப்பிலான உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு.
  • * உலக சந்தையில் இந்திய உணவு பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
  • * வளர்ந்த இந்தியாவின் அத்தியாயம் புதிய பாராளுமன்றத்தில் எழுதப்படும்.
  • *எந்தளவு நாம் தற்சார்பு அடைகிறோமோ அந்தளவு விவசாயிகள் வளம் பெருகும்.
  • *சிறுதானிய கேந்திரமாக இந்தியா மாறி உள்ளது.
  • *இனி வரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம்.
  • * 3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • * பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது
  • * பெண்களின் திறனை அதிகரிக்க அரசு முயற்சி.
  • * அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு பெருகுகிறது.
  • * ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி என்பதே அரசின் நோக்கம். 
  • * நாட்டில் உள்ள 21 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.
  • * மேலும் 3 கோடி வீடுகள் இலவசமாக கட்டிக் கொடுக்க அரசு இலக்கு

 

Trending News

Latest News

You May Like