4 மாவட்டங்களில் அம்மா உணவகத்தில் இலவச உணவு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தான் பாதிப்புகள் அதிகமாக இருந்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வந்தாலும், தொற்று பரவல் வீரியமாகவே உள்ளது. இதனிடையே, மருத்துவக் குழுவினரின் பரிந்துரையை ஏற்று சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் 12 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் , ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த நிலையில் , ஊரடங்கு அமல்படுத்தப்படவிருக்கும் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாளை முதல் ஜுன் 30ம் தேதி வரையில் தொடர்ந்து 12 நாட்களுக்கு இலவச உணவு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newstm.in