எல்லோருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி! எடப்பாடி அதிரடி!!

கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக செலுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவருகிறது. அதே நேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் அனைவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட உடன் தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக செலுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், மகளிர் சுய உதவிக்குழுவுடன் கலந்துரையாடினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசின் நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக செலுத்தப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
newstm.in