1. Home
  2. தமிழ்நாடு

ஆண்களுக்கும் இலவச பஸ்..! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

1

தமிழக்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்றளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா அரசும் பெண்களுக்கான இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியது. பிறகு இத்திட்டம் மூலம் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான ஆண்களுக்கு மட்டும் தனி பேருந்து என்ற சேவை பிப்ரவரி 1ம் தேதி தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் இதனை அரசு இரண்டு நாட்களிலே கைவிட்டது.

இதை போல் தமிழக அரசும் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற திட்டத்தை வழங்க வேண்டும் என்னும் தனது கோரிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது முன்வைத்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “இன்றைய காலகட்டத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமானது. சமீபத்த்தில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் வந்தது. வரும் காலங்களிலும் இது தொடரும்.

காலநிலை மாற்றத்தால் வெள்ளம் மட்டும் கிடையாது, வறட்சி மற்றும் விவசாய பிரச்னைகளும் ஏற்படும். காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசும் மிகத் தீவிர கொள்கைகளை கொண்டு வர வேண்டும். பொது போக்குவரத்துகளை அதிகப்படுத்த வேண்டும், பூங்காக்களை அதிகமாக்க வேண்டும், பசுமை வெளிகளை அதிகமாக்க வேண்டும், மரங்கள் நடுவதை அதிகமாக்க வேண்டும், விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்.ஏனெனில் வரும் காலங்களில் உணவுப் பஞ்சம் இருக்கப் போகிறது. தற்போது அரிசி விலை 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஏனெனில் காலநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு குறுவை, சம்பா பயிர்கள் நான்கரை லட்சம் ஏக்கர் கருகிவிட்டன. போகப்போக இன்னும் மோசமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “காலநிலை மாற்றம் தொடர்பாக கொள்கை முடிவுகளை கொண்டு வந்துள்ளனர். அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்துகளை அதிகப்படுத்த வேண்டும். உதாரணமாக சென்னை சாலைகளில் 75 சதவிகிதம் கார்கள் தான் செல்கின்றன. ஆனால், அதில் செல்லும் மக்கள் என்னவோ 25 சதவிகிதம் பேர்தான். பேருந்தில் செல்லும் 75 சதவிகித மக்களும் மீதமுள்ள 25 சதவிகித இடத்தில்தான் செல்கிறார்கள். கார் போக்குவரத்தை குறைக்க வேண்டும். அதற்கு இலவச பொது போக்குவரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

Trending News

Latest News

You May Like