ஆன்லைன் மட்டுமல்ல, ஏடிஎம் மூலமும் மோசடி நடக்கும்! எஸ்பிஐ எச்சரிக்கை!!

ஆன்லைன் மட்டுமல்லாமல் ஏடிஎம் மூலம் அதிக அளவில் மோசடி நடப்பதால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகமாக பொருட்கள் வாங்குவார்கள். அதனால் மோசடி நபர்கள் பணத்தை ஏமாற்ற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, எஸ்பிஐ மிக முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, ஓடிபி, பின் நம்பர், சிவிவி நம்பர், யுபிஐ பின் ஆகியவற்றை யாருக்கும் பகிர வேண்டாம் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
அதே போல் வங்கி கணக்கு தகவல்களை மொபைல் போனில் சேமிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்கு எண், கடவுச்சொல், ATM அட்டை போட்டோ மொபைல் போனில் இருந்தால் கசிய வாய்ப்பு இருப்பதாக வங்கி கூறியுள்ளது.
பொது இணையம் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொது கணினி, இலவச வைஃபை ஆகியவற்றின் மூலம் பணப்பரிவர்த்தனைகள் செய்யக்கூடாது.
அதே போல் ரகசிய எண், ஓடிபி எண் போன்றவற்றை வங்கி எப்போதும் கேட்காது என்பதால் வாடிக்கையாளர்கள் அவற்றை ஒருபோதும் பகிர வேண்டாம் என்று எஸ்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
newstm.in