1. Home
  2. தமிழ்நாடு

உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான்கரை வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்..!

Q

மயிலாடுதுறை மாவட்டத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தங்கள் நான்கரை வயது குழந்தையுடன் தம்பதி வந்திருந்தனர். நேற்று மதியம் அவர்களது நான்கரை வயது மகளை காணவில்லை. தேடிய போது அருகில் கொட்டகை ஒன்றில் குழந்தை அழுது கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த குழந்தையை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தக் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமி சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.

இன்று காலை சந்தேகத்தின் பேரில் குழந்தையின் உறவினர் தமிழ்வாணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 24ம் தேதி மூன்றரை வயது பெண் குழந்தை 16 வயது சிறுவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சர்ச்சையாக பேசிய கலெக்டர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மயிலாடுதுறையில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like