இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த நான்கு மூத்த குடிமக்கள் திடீர் மாயம்; தேடும் பணி தீவிரம்..!
நியூயார்க்கில் இருந்து பென்சில்வேனியாவிற்கு சென்ற இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த நான்கு மூத்த குடிமக்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் கடைசியாக ஜூலை 29ம் தேதி அன்று, பென்சில் வேனியாவில் உள்ள ஒரு கடைக்கு சென்று உள்ளனர்.
காணாமல் போனவர்கள் டாக்டர் கிஷோர் திவான்,89, ஆஷா திவான்,85, ஷைலேஷ் திவான்,86, மற்றும் கீதா திவான் 84 என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து விசாரணை குழு அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
நாங்கள், சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளும் சுற்று வட்டார பகுதிகளில் தேடி வருகிறோம். எங்களிடம் சில ஆதாரங்கள் உள்ளன. அதன் படி அவர்களை தேடும் பணி நடக்கிறது. மாயமானவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை, என்றனர்.
அமெரிக்காவில் இரண்டு வயதான ஆண்களும், அவர்களது மனைவிகளும் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் சிம்ரன் என்ற 24வயது இந்திய பெண், நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்காக நியூ ஜெர்சிக்கு வந்த சிறுது நேரத்திலேயே காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.