1. Home
  2. தமிழ்நாடு

விமானங்களின் இறக்கை உரசியதால் 4 விமானிகள் பணியிடை நீக்கம்..!

1

நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களுள் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நொய் பாய் விமான நிலையமும் ஒன்று. அங்கிருந்த டியன் பியன் நகருக்கு ஏ-321 என்ற விமானம் புறப்பட தயாராக நின்றது.

அப்போது ஹோ சி மின் நகரத்துக்கு புறப்பட்ட வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் அங்கு நின்று கொண்டிருந்த ஏ-321 விமானம் மீது உரசியது. இதில் அந்த விமானத்தின் இறக்கை சேதமடைந்தது. இதனையடுத்து இரு விமானங்களிலும் இருந்த 386 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ஏ-321 என்ற விமானம் ஓடுபாதையில் சரியாக நிறுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 4 விமானிகளை பணியிடை நீக்கம் செய்து வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like