1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி..!

1

நிர்வாக காரணங்களால் சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூரு உட்பட 4 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து இன்று மாலை 6.10 மணிக்கு கவுகாத்தி செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய விமானம் ஆகிய 2 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே போல் மாலை 5.35 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இரவு 10.05 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 வருகை விமானங்கள் மொத்தம் 4 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக" பயணிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பயணிகள் தங்கள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ள முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like