1. Home
  2. தமிழ்நாடு

கோவை வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது..!

1

கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி  கோவை செட்டிபாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பலால் உதயகுமார் எனும் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கொலை வழக்கில் 8 தனிப்படை போலீசார் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப் பட்டதில் 12 மணி நேரத்தில் 4 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் 4 பேரும் கோவையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது என்றார்.

வழக்கறிஞர் உதயகுமாருக்கு கொடுத்த 30 லட்சம் பணத்தை திரும்ப பெறுவதில் நடைபெற்ற வாக்குவாதத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பெரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இதற்கு பின் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்த வருடம் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாகவும், சோஷியல் மீடியா நடவடிக்கைகளை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல கல்லூரிகளில் மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை  செய்பவர்களை கண்டறிந்து கைது செய்து வருவதாகவும் கூறினார்.

Trending News

Latest News

You May Like