1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் WWE மற்றும் WCW சாம்பியன் சிட் எயூடி காலமானார்..!

Q

ரசிகர்களிடையே செல்லமாக சிட் எயூடி என்று அழைக்கப்பட்டு வந்த முன்னாள் WWE மற்றும் WCW சாம்பியன் சிட் விசியஸ், தொழில்முறை மல்யுத்தத்தில் மிகவும் கவர்ச்சியான பிரபலமான வீரராக திகழ்ந்தார். இவரது உண்மையான பெயர் சிட்னி ரேமண்ட் யூடி. 

சிட் விசியஸ் புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 63.

புற்றுநோய்க்கான சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிரிழந்த தகவலை அவரது மகன் குன்னர் யூடி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குன்னரின் இதயப்பூர்வமான இரங்கல் செய்தியில், “என் தந்தையின் நினைவாக, அன்பான நண்பர்களே, எனது தந்தை சிட் யூடி பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி காலமானார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் வருந்துகிறேன். அவர் வலிமை, கருணை மற்றும் அன்பு கொண்ட மனிதராக இருந்தார், மேலும் அவரது இருப்பு பெரிதும் தவறவிடப்படும். இந்த இழப்பை நாங்கள் துக்கப்படுத்தும் போது உங்கள் எண்ணங்களையும் பிரார்த்தனைகளையும் நாங்கள் பாராட்டுகிறோம். நினைவுச் சேவைக்கான விவரங்கள் விரைவில் பகிரப்படும். உங்கள் ஆதரவுக்கு நன்றி" என்று பகிர்ந்துள்ளார்.

Trending News

Latest News

You May Like