புதிய கட்சி தொடங்க முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா திட்டம்..!
பீகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர் யஷ்வந்த் சின்ஹா. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் நிதித்துறை அமைச்சராகவும், பிரதமர் சந்திர சேகர் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா, 2021-ம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார். பின்னர் தேசிய அளவிலான பெரிய நோக்கத்துக்காக திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகுவதாக கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தார்.
இந்நிலையில் யஷ்வந்த் சின்ஹா தற்போது புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார். யஷ்வந்த் சின்ஹா தலைமையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறுகையில், அடல் விசார் மஞ்ச் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க உள்ளேன் என தெரிவித்தார்.