அட்டைப்பூச்சி போல மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஒன்றிய அரசு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுக ஆட்சியில் தினமும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், அல்லல்படுகிறார்கள். உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை கவனிக்கவில்லை. உயிருக்கு பாதுகாப்பில்லை என ஏடிஜிபி கூறும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.
திருப்பரங்குன்றம் பிரச்சனையை முதலிலேயே பேசித் தீர்த்திருக்க வேண்டும். மத ரீதியான மோதல் வராமல் தடுப்பதே அரசின் கடமை. அரசு தூங்காமல் விழித்துக்கொள்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர வேண்டும். ஈசிஆர் விவகாரத்தில் திமுக அரசின் அழுத்தம் காரணமாக போலீசார் தவறான தகவல்களை கூறுகின்றனர். ஈசிஆர் விவகாரத்தை மூடி மறைப்பதற்காக இந்த திரைப்பட வசனம் எழுதப்பட்டிருக்கிறது. வேங்கைவயலுக்கு செல்ல இனி பாஸ்போர்ட் தேவை.
எம்.ஜி.ஆரை விஜய் புகழ்வதால் அ.தி.மு.க-தான் பலமடையும். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி போல குடிமகன்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஒன்றிய அரசு பட்ஜெட். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுப் பெண்ணின் குரல் மட்டுமே ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் இல்லை. வருமானவரித்துறையில் சலுகை தருவதாக கூறி ஏமாற்றும் ஒன்றிய அரசு, பெட்ரோல் டீசல் விலையில் வரி சலுகை கொடுக்க வேண்டியது தானே! அரைத்த மாவை அரைக்கும் மத்திய அரசு பட்ஜெட் ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நெசவாளர்களுக்கும் ஏமாற்றம் தரும் பட்ஜெட்.
ஏழைகளுக்கான பட்ஜெட் கிடையாது, பீகாரை மையமாக வைத்து பீகாருக்காக மட்டும் சலுகைகள் அதிகம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கிற வரிப்பணத்தைக் கொண்டு பீகாரருக்கு வழங்குகிறீர்கள், தமிழ் நாட்டு மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர்