முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதான் காலமானார்..!

வாஜ்பாய் அரசில் போக்குவரத்து மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராக பதவி வகித்த தேவேந்திர பிரதான்.
நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தர்மேந்திர பிரதானின் இல்லத்தில் வசித துவந்த இவரின் உயிர் இன்று (மார்ச்.17) காலை 10.30 மணியளவில் பிரிந்தது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரின் மறைவுக்கு ஒடிஸா முதல்வர் மோகன் சரண் மான்ஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்நவீன் பட்நாயக் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
மறைந்த பிரதான் ஒரு பிரபலமான தலைவராகவும், திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். மத்தியப் போக்குவரத்து, வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். மக்கள் பிரதிநிதியாகவும், எம்.பி.யாகவும், ஏராளமான நலத்திட்டங்களைச் செய்து மரியாதை பெற்றவர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார் என்று முதல்வர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், ஒடிஸா பாஜகவின் முன்னாள் தலைவருமான டாக்டர் தேவேந்திர பிரதான் மறைவுக்கு முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை ஆவார்.