1. Home
  2. தமிழ்நாடு

பஞ்சாப் மாநில ஆளுநரும் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநருமான பன்வாரி லால் புரோகித் ராஜினாமா..!

1

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசுடன் தொடர் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பன்வாரி லால் புரோகித். கடந்த சில மாதங்களாகவே மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே இத்தகைய மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், பன்வாரிலால் புரோக் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரைபதி முர்முவுக்கு எழுதியிருக்கும் ராஜினாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் ஆகியோர் அமர்வு, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், ஆளுநர் என்பவர் மக்களால் தேர்வு செய்யப்படாத தலைவர் என்பதால், அவரது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி மாநில அரசுகளால் சட்டம் இயற்றும் வழக்கமான போக்கை கட்டுப்படுத்த முடியாது. அடையாள பதவியில் இருக்கும் ஆளுநருக்கு, தனியாக எந்த அதிகாரமும் இல்லை. மாநில அரசும் அதன் அமைச்சர்களும் சொல்வதுபடி ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும். ஆளுநர் இதுபோல செயல்படவில்லை என்றால், அது சட்டமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் செயலாக மாறிவிடும்’ என்று கூறியது.

மேலும், ‘ஆளுநர் என்பவர் மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்படாத தலைவராகவும், சில அரசியலமைப்பு அதிகாரங்களை கொண்டவராகவும் உள்ளார். இருப்பினும், இந்த அதிகாரத்தை மாநில சட்டசபையில் இயற்றும் தீர்மானங்களை முறியடிக்க பயன்படுத்த முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்க அரசால் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலவரையின்றி நிறுத்தி வைப்பது, அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானதாக கருதப்படும் என்று குறிப்பிட்டது.

இதனிடையே, பஞ்சாப் மாநில ஆளுநர் பதவியில் அறிவித்துள்ள பன்வாரி லால் புரோஹித், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கூட்டுத் தலைநகரான சண்டிகரின் யூனியன் பிரதேச நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகுவாதாகவும் அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like