முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டை வெள்ளம் சூழ்ந்தது..!
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக பல தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தி.மு.க., முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் வீடு கோபாலபுரம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் தேங்கியதால், கருணாநிதி வீட்டிற்குள்ளும் மழைநீர் புகுந்தது.