முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனின் உடல்நிலை கவலைக்கிடம்..!

திருவனந்தபுரத்தில் வீட்டில் இருந்த அச்சுதானந்தனுக்கு 23ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர் குழுவின் கண்காணிப்பில் தொடந்து இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சுதானந்தனை முதல்-மந்திரி பினராயி விஜயன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அவர் அச்சுதானந்தனின் உடல்நிலை குறித்து டாக்டர்கள், குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.